200 முறைக்கு மேல் பாம்பு கடி பெற்று வாழும் நபரால் உருவாகும் அற்புத விஷமுறிவு மருந்து
ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் 1 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழப்பதாகவும், உயிர்பிழைப்பதில் 3 மடங்கு மக்கள் உடலுறுப்பை இழப்பது அல்லது நிரந்தர குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
200 முறை பாம்புக்கடி
இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த வாகன மெக்கானிக்கான டிம் ஃப்ரீட்(tim friede) என்பவர், கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு கொடிய பாம்புகளிடம் 200 முறை கடிபட்டுள்ளார்.
மேலும், உலகின் மிக ஆபத்தான பாம்புகளான நாகப்பாம்பு உள்ளிட்ட பல வகை பாம்புகளிலிருந்து தயாரித்த 700க்கும் மேற்பட்ட விஷ ஊசிகளை தானாகவே தனது உடம்பில் செலுத்தியுள்ளார்.
உலகின் மற்ற பகுதிகளுக்கு பாம்புக்கடிக்கு எதிரான சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதே ஃபிரைடின் உந்துதலாக இருந்தது.
ஒரே மருந்து
'சென்டிவாக்ஸ்' எனும் நிறுவனம் ஃபிரைடினை தொடர்பு கொண்டு, அனைத்து வகை பாம்புகளுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் இறங்கியது.
விஷத்துக்கான முறிவு மருந்தும், விஷமும் ஒரே வகையில் பொருந்த வேண்டும். பாம்பு கடிக்கும்போது, அதில் உள்ள விஷத்தின் நச்சுப் பொருட்கள், ஒரே இனத்தில் உள்ள பாம்பாக இருந்தாலும், புவியியல் பகுதியை பொறுத்து மாறுபடும்.
ஒரு முறை பாம்பை கடிக்க வைப்பதன் மூலம், டிம் ஃப்ரீட் உடலில் விஷத்தை செலுத்திய போது, அளவுக்கதிகமான விஷத்தால் கோமாவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
4 நாட்களில் மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றினாலும், அதன் பிறகு அவரது உடலில் விஷம் செலுத்தப்படுவதில்லை. ஆனால் முன்னர் செலுத்திய விஷம், அவரது உடலில் அற்புதமான ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்கிறது.
இந்த ஆன்டிபாடிகளை வைத்து உருவாக்கப்பட்ட விஷமுறிவு மருந்து, கருப்பு மாம்பா, நாகம் உள்ளிட்ட 13 வகை பாம்புகளுக்கு எதிராக 100% செயல்படுகிறது.
இந்த விஷ முறிவு மருந்து, எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்டு, எல்லா வகை விஷங்களுக்கும் எதிராக போராடக்கூடிய விஷ முறிவு மருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |