ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட, 59 வயதான ரையன் ரூத் (Ryan Routh) என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த சம்பவம், 2024 செப்டம்பர் மாதம் புளோரிடா மாநிலம் வெஸ்ட் பாம் பீச் நகரில் உள்ள Trump International Golf Club-இல் நடந்தது. அப்போது ட்ரம்ப், ஜனாதிபதி வேட்பாளராக பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரி ஒருவர், புதர்களுக்குள் இருந்து துப்பாக்கி குழாய் வெளிப்பட்டதை கவனித்து ரவுத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் ரூத் அங்கிருந்து தப்பியோடினார், ஆனால் அருகிலேயே கைது செய்யப்பட்டார்.

“ஒரு முக்கிய ஜனாதிபதி வேட்பாளரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார், எந்த வருத்தமும் காட்டவில்லை. எனவே ஆயுள் தண்டனை தவிர வேறு தண்டனை பொருந்தாது” என்று நீதிபதி ஐலீன் கேனன் தீர்ப்பளித்துள்ளார்.
ரூத், நீதிமன்றத்தில் தன்னைத் தானே வழக்கறிஞராகக் கொண்டு, பல்வேறு அசாதாரண செயல்கள் செய்தார். ட்ரம்பை கோல்ஃப் விளையாட அழைத்தது, ஹிட்லர் மற்றும் புடின் குறித்து பேசியது போன்றவை அதில் அடங்கும்.
நீதிபதி அவரை குற்றவாளி என தீர்ப்பளித்த பிறகு, ரூத் தன்னை பேனா கொண்டு குத்திக் கொள்ள முயன்றார். உடனே அமெரிக்க மார்ஷல்கள் அவரை கட்டுப்படுத்தினர்.
அவரிடம் இருந்து ஸ்கோப் மற்றும் நீளமான மாக்சின் கொண்ட துப்பாக்கி மற்றும் ட்ரம்ப் வரக்கூடிய இடங்களின் பட்டியல், “an assassination attempt” என குறிப்பிட்ட குறிப்பு ஆகியவை மீட்கப்பட்டன.
இந்த சம்பவம், 2024-ல் ட்ரம்ப் மீது நடந்த இரண்டாவது கொலை முயற்சியாகும். அதற்கு முன், பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஒருவர் உயிரிழந்தார், ட்ரம்ப் உட்பட பலர் காயமடைந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |