ஊழியர்கள், வீட்டு உதவியாளர்கள்... பல கோடி மதிப்புள்ள பங்குகளை அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்
ப்ருடென்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சய் ஷா சுமார் ரூ 34 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக அளித்துள்ளார்.
தமக்கு சொந்தமான பங்குகளில்
ப்ருடென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள், ஷாவின் தனிப்பட்ட உதவியாளர்கள், அதாவது அவரது வீட்டின் வேலைக்காரர்கள், சாரதி உட்பட மொத்தம் 650 பேர்களுக்கு அவர் 175,000 பங்குகளை அள்ளிக்கொடுத்துள்ளார்.
தொழில்முறை வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையிலேயே சஞ்சய் ஷா தமக்கு சொந்தமான பங்குகளில் ஒருபகுதியை பரிசாக அளித்துள்ளார்.
எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்பதால், பெற்றுக்கொள்பவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுக்கலாம். இது வெறும் பங்கு பரிமாற்றம் மட்டுமல்ல; ஊழியர்களாக மட்டுமல்ல, இந்தப் பயணத்தில் தோழர்களாகவும் என்னுடன் நின்றவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என சஞ்சய் ஷா குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவிற்கு நன்றி
தமது ஊழியர்களின் விசுவாசம் மற்றும் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அவர்களை ப்ருடென்ட்டின் வெற்றியின் அடித்தளம் என்று குறிப்பிட்டார். ஷாவின் தலைமையின் கீழ், புருடென்ட் நிறுவனம் இந்தியாவில் ஒரு முன்னணி நிதி சேவை குழுமமாக வளர்ந்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, அவர் முக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் சென்று பல வணிகப் பிரிவுகளை உருவாக்கியுள்ளார்.
தனது வெற்றியை ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் எடுத்த முடிவு, தனது தொழில்முனைவோர் பயணத்தில் அவர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றியைத் தெரிவிப்பதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |