பள்ளி மாணவி சீரழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: DNA சோதனையால் சிக்கியுள்ள குற்றவாளி
பிரான்சில் 17 வயது மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் ஆனபின், DNA சோதனையால் சிக்கியுள்ளார் குற்றவாளி.
சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி
1994ஆம் ஆண்டு, மே மாத இறுதியில், Nadege Desnoix (17) என்னும் மாணவியின் உயிரற்ற உடல் பிரான்சிலுள்ள Chateau-Thierry என்னுமிடத்தில் சாலையோரமாக இலை தளைகளால் மூடப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த துயர சம்பவம் நிகழ்ந்து 27 ஆண்டுகளாக அந்த வழக்கில் குற்றவாளி யாரும் சிக்காத நிலையில், 2021ஆம் ஆண்டு, Nadege அணிந்திருந்த ஹேர்பேண்டிலிருந்து கிடைத்த DNA யாருடையது என பரிசோதனையில் தெரியவந்தது.
சிக்கிய நபர்
அது, Pascal Lafolie (58) என்னும் நபருடையது. விடயம் என்னவென்றால், இந்த குற்றம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு, அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்பது ஞாபகம் இல்லையாம்.
தான் சம்பவ தன் சகோதரருடன் இடத்துக்கு சென்றது தனக்கு நினைவுள்ளதாகவும், ஆனால், அப்போது Nadegeஐ சந்திக்க நேர்ந்ததாகவும், தன் சகோதரர்தான் அந்தப் பெண்ணை சீரழிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார் Pascal.
அப்போது தான் தன் சகோதரரை தடுக்க முயன்றதாகவும், தன் சகோதரர் தன்னை தலையில் தாக்கியதாகவும், அதனால், நடந்த விடயம் தனக்கு சரியாக நினைவில்லை என்றும் கூறியுள்ளார் Pascal.
துரதிர்ஷ்டவசமாக Pascalஇன் சகோதரர் Pascal கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே மரணமடைந்துவிட்டார்!
இந்நிலையில், அந்த வழக்கில் இன்று Pascal விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.
புதன்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |