பள்ளிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது - பரபரப்பு சம்பவம்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்குள் இன்று ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கைது
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், ஓல்ட் மால்டா பகுதியில் உள்ள முச்சியா அஞ்சல் சந்திர மோகன் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய அந்த நபர் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்தார். இதனால், பள்ளி மாணவர்களிடையே பீதி ஏற்பட்டது.
அவர் துப்பாக்கியை ஏந்தியபடி மாணவர்களை நோக்கி சத்தமிட்டு, அவர்களையும் வகுப்பு ஆசிரியரையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். பயந்து போன மாணவர்களை கூச்சலிட்டார். இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாத நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, கத்தி மற்றும் 2 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், தன் மகனும், மனைவியும் ஒரு வருடமாக காணாமல் போனதால், இவ்வாறு நடந்துகொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தக்க நேரத்தில் அந்த மர்ம நபரை கைது செய்த காவல்துறையினரைப் பாராட்டினார்.