சமந்தாவுக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் இளைஞர்
குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள நிலையில் நடிகை சமந்தாவுக்கும் ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டுள்ளார்.
சமந்தாவுக்கு கோவில்
தமிழ் திரையுலகில் பல்வேறு திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.
அந்தவரிசையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமாக அறியப்பட்ட நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார்.
இவருக்கு இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார். இச்சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக உள்ளார். அவர் தான் வசிக்கும் பகுதியில் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.
அந்த கோயிலின் உள்ளே சமந்தாவுக்கு மார்பளவு சிலை வைத்துள்ளார். அதற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார். மேலும், கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என்று பெயரும் வைத்துள்ளார்.
இந்த கோவிலை பார்ப்பதற்காக மக்கள் குடும்பத்தினருடன் திரண்டு வருகிகின்றனர். அங்கு, சமந்தாவின் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |