வீட்டின் மேலறையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம்: என்னவென்று பார்க்கச் சென்ற வீட்டு உரிமையாளர் கண்ட காட்சி
அமெரிக்காவில், மூன்று நாட்களாக தன் வீட்டின் மேல் பகுதியில் உள்ள, பொருட்கள் போட்டுவைக்கும் இடத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்பதை கவனித்துள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர்.
என்னவென்று பார்க்கச் சென்றபோது...
வாஷிங்டனில் வாழும் Davis Wahlman, தன் வீட்டின் மேல் பகுதியில், பொருட்கள் போட்டுவைக்கும் இடத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்பதை கவனித்துள்ளார்.
Credit: Komo News
மூன்று நாட்களாக ஏதோ நடமாடும் சத்தம் கேட்கவே, ஏதாவது விலங்குகள் வீட்டுக்குள் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, அது என்னவென்று பார்க்கச் சென்றுள்ளார் அவர்.
ஆனால், அந்த பகுதி உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்திருக்கிறது. என்ன செய்வதென்று யோசித்த Davis, அந்த அறையின் கதவைத் தட்டியிருக்கிறார்.
Credit: Komo News
வீட்டில் மேல் பகுதியில் இருந்தது என்ன தெரியுமா?
Davis அந்த அறையின் கதவைத் தட்டவும், உள்ளேயிருந்து, ’யார் அது, ஜிம்மியா?’ என ஒரு பெண்ணின் குரல் கேட்கவே அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.
அதைத் தொடர்ந்து கதவைத் திறந்துகொண்டு ஒரு பெண் வந்துள்ளார். அவரிடம் நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள் என Davis கேட்க, ’இது என் வீடு, மூன்று நாட்களாக இங்குதான் இருக்கிறேன். இங்கு தங்கலாம் என ஜிம்மிதான் சொன்னார்’ என்று கூறியிருக்கிறார் அந்தப் பெண்.
Credit: Komo News
உடனே அவசர உதவியை அழைத்துள்ளார் Davis. ஆனால், பொலிசார் வர தாமதமாகவே, அந்தப் பெண் அங்கிருந்து ஓடிவிட்டாராம்.
தன் வீட்டின் குளியலறை வழியாக அந்தப் பெண் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என கருதும் Davis, உடனடியாக வீட்டின் பூட்டுகளை எல்லாம் மாற்றிவிட்டாராம். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.