மு.க ஸ்டாலின் முதல்வரானதால் தீக்குளித்து உயிரைவிட்ட நபர்! வேண்டுதல் நிறைவேறியதால் கோவிலுக்குள் செய்த பகீர் செயல்
அதிர்ச்சி சம்பவம் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வரானதால் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் நபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயிலில் உலகநாதன் என்பவர் தீக்குளித்துள்ளார். பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீவைத்து கொண்ட அவர் உயிரிழந்துள்ளார்.
தீக்குளித்தற்கான காரணம் தொடர்பாக உலகநாதன் இருபக்கம் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றும், செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகநாதன் போக்குவரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக இருந்து ஓய்வு பெற்றவர். உலகநாதன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உலகநாதன் முதல்வர் ஸடாலின் முதல்வராக வேண்டுமென அந்த பகுதியில் உள்ள புது காளியம்மன் கோயில் வேண்டி உள்ளார்.
தனது வேண்டுதல் நிறைவேறினால் தீக்குளிக்கிறேன் என்று வேண்டி உள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் முதல்வரானதை தொடர்ந்து புது காளியம்மன் கோவிலில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
கொரோனா காரணமாக கோவில்கள் திறக்கப்படமால் இருந்தது. தற்போது கோவில்கள் திறக்கப்பட்டதால் கோவிலுக்குள் அவர் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார்.