பிரித்தானியாவில் மனைவி குழந்தைகளைக் கொன்ற கேரள மாநிலத்தவர்: கைது செய்யப்படும் காட்சிகள் வெளியாகின
பிரித்தானியாவில் வாழும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியையும் பிள்ளைகளையும் கொடூரமாகக் கொலை செய்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
மனைவி குழந்தைகளைக் கொன்ற கேரள மாநிலத்தவர்
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சஜு (Saju Chelavalel, 52), தன் மனைவி அஞ்சு (Anju Asok) மற்றும் பிள்ளைகள் ஜீவா (Jeeva) மற்றும் ஜான்வி (Janvi)யுடன் பிரித்தானியாவிலுள்ள Northamptonshireஇல் வாழ்ந்துவந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, தன் மனைவியையும் பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்தார் சஜு.
news sky
பொலிசார் அவரைக் கைது செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கையில் கத்தியுடன் அமர்ந்திருக்கும் சஜு தன்னை சுட்டுக்கொல்லுமாறு பொலிசாரை வற்புறுத்தியுள்ளார். கத்தியைக் கீழே போடுமாறு பொலிசார் கூறியும் அவர் கத்தியைக் கீழே போடாததால் பொலிசார் அவர் மீது டேஸரை பிரயோகிக்கவேண்டி வந்துள்ளது.
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்
சஜுவுக்கு தீர்ப்பு வழங்கும் முன் பேசிய நீதிபதி, உங்கள் சுய பச்சாதாபமும், மனைவி துரோகம் செய்ததாக எண்ணி ஏற்பட்ட சந்தேகமும், மது போதையும் இணைந்துகொள்ள, நீங்கள் மூன்று இளம் உயிர்களை பலிவாங்கிவிட்டீர்கள் என்றார்.
நீதிமன்றத்தில், சஜூ வீட்டில் பதிவாகியிருந்த ஒடியோ ஒன்றும் ஒலிக்கச் செய்யப்பட்டது. அதில் குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க, பின்னணியில் குழந்தைகளைத் தூங்கவைப்பதற்காக சாக்லேட்டையும் தூக்க மாத்திரைகளையும் கலந்து மிக்சியில் அரைக்கும் சத்தம் பதிவாகியிருந்தது.
செவிலியரான மனைவியையும், சின்னஞ்சிறு பிள்ளைகளையும் கொடூரமாகக் கொலை செய்த சஜுவுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |