17 வயது மைத்துனரை சமையலறையில் 4 துண்டுகளாக வெட்டிய நபர்! அதிர வைத்த சம்பவம்
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் ஆட்டோ ஓட்டுநர் தனது மைத்துனரை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாயமான சகோதரர்
மகாராஷ்டிராவின் மும்பை chembur பகுதியைச் சேர்ந்தவர் சபிக் ஷேக் (33). ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது மனைவி சனாவுடன் வசித்து வந்தார்.
திங்கட்கிழமை அன்று மனைவி சனா பெற்றோர் வீட்டில் இருந்தபோது சபிக் அங்கு வந்துள்ளார். அங்கிருந்த மனைவியின் வளர்ப்பு தம்பியான ஈஸ்வரை மட்டும் சபிக் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஈஸ்வரை காணவில்லை என்பதால் சனாவும் அவரது பெற்றோரும் பதட்டமடைந்தனர். ஆனால், மனைவியை வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், பெற்றோர் வீட்டிலேயே இருக்குமாறும் கூறியுள்ளார்.
NDTV
துண்டு துண்டாக வெட்டிய சபிக்
இந்த நிலையில் சனா தனது சகோதரரை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் சபிக் ஷேக்கை பிடித்து விசாரித்தனர்.
தீவிர விசாரணையில் ஈஸ்வரை கொலை செய்ததாகவும், நான்கு துண்டுகளாக அவரது உடலை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்வர் தனது மனைவியை தகாத முறையில், கிண்டல் செய்தல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பலமுறை கண்டித்து அவர் அவ்வாறு நடந்துகொண்டதால் கொலை செய்ததாகவும் சபிக் கூறியுள்ளார்.
iStock
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |