முகத்தில் கேக் பூசியதால் நண்பர் குத்திக்கொலை: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அதிர்ச்சி
Man killed by birthday boy after smearing cake on face: ஜம்முவில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கினை முகத்தில் பூசியதால், நண்பர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் ஜம்முவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேக் வெட்டும்போது
ஜம்முவின் லோயர் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த நீரஜ் என்பவர், சாலையோரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவரது நண்பர்கள் பவன் நாயர், சோத்ரா, சிங், பாட்தி ஆகியோர் கேக் வெட்டும்போது உடனிருந்தனர். அச்சமயம் பவன் கேக்கினை முகத்தில் பூசியதால் நீரஜ் கடும் கோபமடைந்துள்ளார்.
உடனே வாக்குவாதம் ஏற்பட, அவர் கத்தியால் நாயரின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக
இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த பவன், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷு ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
