தந்தையின் தலையை வெட்டி ப்ரீசருக்குள்... படுக்கையில் உடல்: அம்பலமான மகனின் கொடூரம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தந்தையின் தலையை வெட்டி, உடல் பாகங்களை சேதப்படுத்திய மகணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பென்சில்வேனியா மாகாணத்தின் லங்காஸ்டர் பகுதியிலேயே நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் நடந்துள்ளது. 32 வயதான டொனால்ட் லாரன்ஸ் மேஷி என்பவரே இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்.
67 வயதான தந்தை டொனால்ட் மேஷியின் வெட்டப்பட்ட தலைதான் ப்ரீசரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
புதன்கிழமை பகல் மேற்கு ஸ்ட்ராபெரி தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் இருந்து பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பே இந்த கொடூர சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தது.
தங்களின் குடும்ப உறுப்பினரான டொனால்டு என்பவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுத்து வந்தனர்.
ஆனால் குடும்பத்தினரை மொத்தமாக ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் லாரன்ஸ் மேஷியே உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையின் வெட்டப்பட்ட தலை ப்ரீசரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடல் பாகம் படுக்கையறையில் இருப்பதாகவும் அவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், ப்ரீசருக்குள் திறந்து பார்க்க, உள்ளே வெட்டப்பட்ட தலையும், படுக்கையறையில் உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை கத்தியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளதாகவும், அதன் பின்னர் கை கால்களை வெட்டி நீக்கியதும் தெரிய வந்துள்ளதை அடுத்து, பொலிசார் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், தந்தையை கொலை செய்ததற்கான காரணத்தை குறித்த நபர் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.