15 வயது சிறுமியை மீண்டும் மீண்டும்..சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் கொலை
அமெரிக்காவில் 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் கொலை செய்யப்பட்டார்.
சிறுமியை வன்புணர்வு செய்த ஆசிரியர்
வடக்கு கரோலினாவின் நடுநிலைப் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் எர்னஸ்ட் நிக்கோலஸ்.
இவர் 2008ஆம் ஆண்டில் 15 வயது சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தனது மகனைப் போல் பேஸ்புக்கில் நடித்து குறித்த சிறுமிக்குதகாத செய்திகளை இவர் அனுப்பியிருக்கிறார் என புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் நிக்கோலஸ் கைது செய்யப்பட்டார். 2011யில் சட்டப்பூர்வ வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிக்கோலஸிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2027ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுக்கப்பட்ட இருந்தார்.
சிறையில் மரணம்
இந்த நிலையில், 60 வயதான நிக்கோலஸ் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டதால், அவரது அறையில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆனால் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிக்கோலஸ் கொலை செய்யப்பட்டதாகவும், 2010யில் இரண்டாம் நிலை கொலைக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட 41 வயது வில்பர்ட் பால்ட்வினுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிக்கோலஸின் மரணம் விசாரணையில் உள்ளது.
பால்ட்வினுக்கு கொலை வாரண்ட் வழங்கப்பட்ட பிறகு, அவரது தற்போதைய தண்டனையைத் தொடர NCDAC-க்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |