ஆசையாக விடுமுறையை கொண்டாட சென்ற பிள்ளைகள்..தந்தை அரங்கேற்றிய கொடூரம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை ஒருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜல்னா மாவட்டத்தில் உள்ள கச்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஹொட்டல் ஒன்றில் தொழிலாளியாக இவர் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு முதல் மனைவி மூலம் சோஹம், ஷிவானி (8) மற்றும் திபாலி (7) என மூன்று பிள்ளைகள் பிறந்தன. ஆனால், முதல் மனைவி இறந்த பின்னர் சந்தோஷ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், சந்தோஷ் தனது பிள்ளைகளை சந்தித்து ஊருக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். பிள்ளைகளும் ஆசையாக விடுமுறையை கொண்டாடலாம் என அவருடன் சென்றுள்ளனர்.
அவர்கள் சனிக்கிழமை அன்று அம்பாட் தாலுகாவில் உள்ள டோமேகான் கிராமத்திற்கு சென்றுள்ளனர். யாரும் இல்லாத பகுதியில் உள்ள கிணற்றுக்கு அருகே சந்தோஷ் தனது பிள்ளைகளை அழைத்து சென்று, திடீரென மூவரையும் உள்ளே தூக்கி வீசியுள்ளார். இதில் மூன்று பேரும் நீரில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் தேடுதலுக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று சந்தோஷை கைது செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், அவரே தங்களுக்கு போன் செய்து தகவல் கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |