ஏன் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது? உங்க காசத்தானே கொடுக்குறாங்க - நடிகர் விஷால் ஆவேசம்
தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்வதில் தப்பில்லை என நடிகர் விஷால் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் களம்
தமிழ்ப்பட நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டில் அரசியலில் களம் காணப்போவதாக அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் தனது பெயர் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதில் தப்பில்லை என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
ஏன் காசு வாங்கக்கூடாது?
இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஓட்டு போடுறதுக்கு ஏன் காசு வாங்கக்கூடாது? உங்க காசத்தான அவங்க கொடுக்குறாங்க. அவங்க வீட்டு காசையா கொடுக்குறாங்க. அவங்க வயலில் இறங்கி, உழைத்து சம்பாதித்து, 5 வருஷம் வேலையை செஞ்ச காசையா தராங்க? ஒரு எம்.எல்ஏவுக்கும், எம்.பிக்கும் மாத சம்பளம் எவ்வளவு? ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் தைரியமாக எப்படி கொடுக்குறாங்க?
இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்றால் என்னோட வேலை பாக்குறவங்க (அசிஸ்டெண்ட்ஸ்) சொல்றதுல தெரியுது. உங்க காச உங்ககிட்டேயே கொடுத்துட்டு, மறுபடியும் அடுத்த 5 வருஷம் காசு சம்பாதிப்பதற்கான நல்ல ஒரு முயற்சி இது.
அதனால் உங்க பணத்தை நீங்களே வாங்கிக்கோங்க, வாங்கிட்டு நீங்க நினைக்கிற ஆளுக்கு ஓட்டு போடுங்க. தயவு செய்து ஓட்டு போடுங்க. அவங்களும் காசு கொடுக்குறத நிப்பாட்ட மாட்டாங்க. உண்மை கசக்கும், ஆனால் சொல்லி தான் ஆகும்'' தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |