மனைவியை கொலை செய்து, குழந்தைகள் முன்பே உடலை வேகவைத்த கொடூர கணவன்! அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தானில் குழந்தைகளின் கண் முன்னே மனைவியை கொலை செய்து, உலோக பானையில் உடலை வேகவைத்த கொடூர கணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் ஆஷிக். தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது மனைவி நர்கீஸை சட்டவிரோத உறவுக்கு ஆஷிக் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த நர்கீஸை தலையணை வைத்து அமுக்கி ஆஷிக் கொலை செய்துள்ளார்.
தனது ஆறு குழந்தைகளின் கண் முன்னே அவர் இந்த கொலையை செய்துள்ளார். அதன் பின்னர் கொடூரமான செயல் ஒன்றை அவர் செய்துள்ளார். உலோக பானை ஒன்றில் உயிரிழந்த மனைவியின் உடலை போட்டு கொதிக்க வைத்துள்ளார்.
தந்தையின் இந்த செயலை பார்த்து அவரது குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எனினும் ஆஷிக்கின் 15 வயது மகள் துணிச்சலாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
geo.tv
அதனைத் தொடர்ந்து, மூன்று குழந்தைகளுடன் ஆஷிக் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், நர்கீஸின் உடலை மீட்டனர். அப்போது அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அங்கிருந்த 3 குழந்தைகளையும் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆஷிக்கை வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாகவும், குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.