மனைவியின் நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு., கணவன் கைது
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு செய்ய மனைவியை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
மூடநம்பிக்கை
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில், பர்ஜாங் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தாந்த்ரீக முறைகளில் மூடநம்பிக்கை காரணமாக, ஆண் ஒருவர் தனது மனைவியை நிர்வாண சடலத்துடன் சடங்கு செய்வதற்காக அவரை கொலை செய்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பாபாலஸ் கிராமத்தைச் சேர்ந்த மமதா கதுவா (Mamata Khatua) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மூடநம்பிக்கை கொண்ட கணவர் அஸ்தமா கதுவாவால் (Astama Khatua) அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
OTV
தகவல்களின்படி, நேற்று (சனிக்கிழமை) சிவராத்திரி இரவில் நிர்வாண உடலுடன் சில தாந்த்ரீக சடங்குகளை செய்ய அஸ்தமா கதுவா திட்டமிட்டிருந்தார்.
அஸ்தமாவின் சகோதரர் சிவா கதுவா கூறுகையில், அஸ்தமா தாந்த்ரீக நடைமுறைகளில் ஈடுபட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அண்ணியை அண்ணன் கொன்றது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சிவா தெரிவித்தார்.
அஸ்தமா மம்தாவின் இரண்டாவது கணவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் தனது முதல் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு அஸ்தமாவுடன் வழவதற்காக ஓடிவந்தவர் என கூறப்படுகிறது.
எனினும், தனது மனைவி கொலையில் தனக்கு தொடர்பு இல்லை என குற்றம் சாட்டப்பட்ட அஸ்தமா மறுத்துள்ளார்.
அதேநேரம், இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பர்ஜாங் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.