ஏழ்மை... படிப்பை கைவிட்டு வீட்டை விட்டே வெளியேறியவர்: இன்று ரூ 17,000 கோடி நிறுவன உரிமையாளர்
தந்தையின் மரணத்தை அடுத்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய மேனன், இறுதியில் வேறு வழியின்றி வெறும் 50 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இளம் வயதிலேயே தந்தையை
ஒரு நாள் தாம் வெற்றியை ருசிப்போம் என உறுதியாக நம்பிய மேனன், தமது கடின உழைப்பால் இன்று ரூ 17,000 கோடி நிறுவன உரிமையாளராக மாறியுள்ளார்.
கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த மேனன் தமது இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். விவசாயியான தந்தையின் மரணத்தால் குடும்பமே பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
இருப்பினும் தனது கல்வியை மேனன் தொடர்ந்துள்ளார். ஆனால் பொருளாதார நெருக்கடியை இனிமேலும் சமாளிக்க முடியாது என்ற நிலையில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு படிப்பை கைவிடும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், 1990களில் கட்டுமான தொழிலில் எதிர்காலம் இருப்பதை உணர்ந்த மேனன், 1995ல் Sobha Developers என்ற நிறுவனத்தை தொடங்கினார். தற்போது அந்த நிறுவனம் Sobha Limited என அறியப்படுகிறது.
மட்டுமின்றி, இந்தியாவில் அறியப்படும் நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது. மேனனின் கட்டிட வடிவமைப்பு திறனானது ஓமன் நாட்டில் முத்திரை பதிக்கும் கட்டிடங்களான Sultan Qabus மசூதி மற்றும் Al Bustan அரண்மனை ஆகியவற்றில் பங்களிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது.
வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது
வெறும் 50 ரூபாய் பணத்துடன் ஓமான் நாட்டுக்கு கப்பல் ஏறியவர் மேனன். எவரும் அறிமுகமில்லாத வெளிநாடு என்ற போதும், கட்டிடங்களின் உள அலங்கார வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக துணிந்து செய்யத் தொடங்கினார்.
அவரது தொழில் நேர்த்தி, மேலும் பல வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது. பல முதன்மையான வேலைகளும் அவரை நாடி வந்தது. நாராயண மூர்த்தியின் வழிகாட்டுதலின் கீழ் பெங்களூர் இன்ஃபோசிஸ் வளாகத்தின் ஆலோசகராகவும் மேனன் பணியாற்றியுள்ளார்.
பட்டப்படிப்பு இல்லாத போதும் அவரது தனித்திறமைக்கு இன்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்வாக்கு உள்ளது. அவரது Sobha Limited நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 17,225 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |