79 வயதில்.. அடர்ந்த காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் மர்ம மனிதர்! யார் இவர்?
சிங்கப்பூரில் ஒருவர் தனது ஆடம்பர வாழ்க்கையை துறந்து சுமார் 30 வருடம் காட்டில் வசித்து வரும் நிகழ்வு இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 திகதி அன்று சோவா சூ காங்கில் சட்டவிரோதமாக காய்கறிகளை விற்கும்போது அவர் பிடிபட்டார், அப்போது தான் அவர் வீடு இல்லாமல் இவ்வளவு காலம் காட்டில் வாழ்ந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காய்கறிகள், அவர் சொந்தமாக பயிரிட்டு வளர்த்ததாக கூறப்படுகிறது. இவரது பெயர் Oh Go Seng என்பது தெரிய வந்துள்ளது. அவர் தீவின் வடமேற்கு பகுதியில் உள்ள காட்டில் வசித்து வந்துள்ளார்.
ஆனால் அவர் வசித்த சரியான இடம் பற்றி வெளியிடப்படவில்லை. காட்டில் வசிப்பதால் மிளகாய் பாடி, பாண்டன் இலை போன்ற காய்கறிகளை சொந்தமாக அவரே பயிரிட்டுள்ளார். மேலும் அவர் வெளிப்பகுதியில் திறந்த நெருப்பில் சமைப்பார் என்றும் பெரும்பாலும் அவர் பயிரிட்ட காய்கறிகளை பயன்படுத்தியே அரிசி கஞ்சி சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்ற நபர்களால் அவருக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும் தனக்கு 50 வயதில் மனைவி இருப்பதாகவும் மருத்துவம் படிக்கும் 19 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் இந்தோனேசியாவின் பத்தாமில் வசிப்பதாக கூறியுள்ளார்.
காட்டில் தொழிலாளியாக வேலை செய்து சேமித்த பணத்தை அவர்களுக்கு மாதந்தோறும் $500 அனுப்புவதாகவும் அவர் கூறினார். Oh Go Seng என்ற 79 வயதான அவரின் கதை தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது