ஒரே வீட்டில் 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் நபர்! பல பெண்களை திருமணம் செய்தது ஏன் என விளக்கம்
15 மனைவிகளுடன் வாழ்வதால் அரசர் போல தன்னை உணர்வதாக கூறும் நபர்
15 மனைவிகள் என்பது 20 ஆக மாறினாலும் பிரச்சனை இல்லை என கூறும் டேவிட் சாகாயோ
கென்யாவில் நபர் ஒருவர் 15 மனைவிகள் மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாகாயோ கலலூயானா. 61 வயதான இவர் 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். மேலும் அவர்களுடன் ஒன்றாகவே வசித்து வருகிறார்.
டேவிட் சாகாயோ கலலூயானாவுக்கு தனது மனைவிகள் மூலம் மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகளை கொண்டிருக்கிறார். அந்நாட்டு பத்திரிகைகள் இவரை குறித்து செய்திகள் வெளியிடும்போது இது மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து டேவிட் சாகாயோ கூறும் காரணம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
YouTube
தனது திருமண வாழ்க்கை பற்றி அவர் கூறுகையில், 'அரசர் சாலமன் மொத்தம் 700 மனைவிகள், 300 துணைவிகளுடன் வாழ்ந்தார். நான் எந்த விதத்திலும் சாலமனை விட குறைந்தவர் இல்லை. நான் பல பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கியுள்ளேன். அவர்கள் 20 மனைவிகளாக மாறினாலும் அது ஒரு பிரச்சனையாக இருக்காது' என தெரிவித்துள்ளார்.
ஒரே வீட்டில் இருந்தாலும் மனைவிகளுக்குள் சண்டை வராமல் பார்த்துக் கொள்வதாக டேவிட் சாகாயோ குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் ஒரு பொறுப்பான மனிதர் என்றும், அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவும் இருக்கும் என சாகாயோவின் மனைவிகளின் ஒருவரான ஜெசிகா கூறியுள்ளார்.
Photo Credit: Afrimax