வீட்டுக்குள் இருந்து கேட்ட அழுகுரல்.., மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக மகன் செய்த காரியம்
மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆசையில் தாயை வீட்டுக்குள் அடைத்து பூட்டிவிட்டு மனைவியுடன் மகன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயை அடைத்து வைத்த மகன்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய மாநிலமான ஜார்கண்டில் ராம்கர் மாவட்டத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவிற்கு செல்லும் ஆசையில் மகன் ஒருவர் தாயை வீட்டில் பூட்டி வைத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து ராம் கர் காவல் துறை அதிகாரி பரமேஷ்வர் பிரசாத் கூறுகையில், "சுபாஷ் நகர் காலனியில் உள்ள மத்திய கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.
இங்கு 65 வயதான சாந்தினி தேவியின் வீட்டில் இருந்து உதவி வேண்டும் என்று அழுகுரல் என்று கேட்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த மூதாட்டியை பொலிஸார் பத்திரமாக மீட்டனர்.
அவர் சோர்வுடன் இருந்ததால் முதலில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டியின் மகன் அகிலேஷ் குமார், தனது மனைவி, குழந்தை, மாமியாருடன் சேர்ந்து மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக தாயை வீட்டிற்குள் அடைத்து பூட்டி விட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் ஒரு அதிகாரி கூறுகையில், "அகிலேஷின் தாயார் பலவீனமாக இருந்ததால் அவருக்கு தேவையான தண்ணீர், உணவுகளை தயார் செய்துவிட்டு மகா கும்பமேளாவுக்கு சென்றுள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |