இரண்டு இலட்சம் யூரோக்கள், தங்கச் சங்கிலி கிடைக்கும் என ஆசைகாட்டி ஒரு நூதன மோசடி
இந்தியர் ஒருவர் நூதன மோசடி ஒன்றில் சிக்கி 17 இலட்ச ரூபாயை இழந்தார்.
நூதன மோசடி
இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த டெக்சி சாரதி ஒருவருக்கு, சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக இரண்டுபேர் நண்பர்களாகியுள்ளனர்.
பிரான்சிலுள்ள திருச்சபை ஒன்று, ஏழைகளுக்கு உதவி செய்வதாக கூறியுள்ள அந்த நபர்கள், அதன்படி, அந்த சாரதிக்கு பிரான்சிலிருந்து இரண்டு இலட்சம் யூரோக்கள், ஒரு தங்கச் சங்கிலி, மடிக்கணினி, ஐபோன் மற்றும் பைபிள் முதலான பல பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த பணம் மற்றும் பொருட்களை பெறவேண்டுமானால், அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
ஏமாந்ததை தாமதமாக உணர்ந்த சாரதி
அந்த மோசடியாளர்கள் கூறியதை நம்பிய அந்த 54 வயது சாரதி, அவர்களுக்கு 17.37 இலட்ச ரூபாய் அனுப்பியுள்ளார். அவ்வளவுதான், பணத்தைப் பெற்றுக்கொண்டபின் அந்த நபர்கள் மீண்டும் அவரை தொடர்புகொள்ளவும் இல்லை, தொடர்பையும் துண்டித்துவிட்டார்கள்.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த சாரதி, பொலிசாரை அணுகியுள்ளார். பொலிசார் இந்த நூதன மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.