நேர்காணலுக்கு 25 நிமிடங்கள் முன்னதாக வந்ததற்கு வேலையை இழந்த நபர்.., வைரலாகும் பதிவு
வேலை நேர்காணலுக்கு மிக விரைவாக வந்ததற்காக விண்ணப்பதாரரை நிராகரித்ததாக ஒரு வணிக உரிமையாளர் கூறியுள்ளார்.
விண்ணப்பதாரர் நிராகரிப்பு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவை தளமாகக் கொண்ட ஒரு துப்புரவு சேவையின் உரிமையாளர் மேத்யூ பிரீவெட். இவர், "அலுவலக நிர்வாகி பதவிக்கான வேட்பாளர் ஒருவர் நேர்காணலுக்கு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு முன்பு வந்ததற்காக அவரை நிராகரித்ததாக"கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஒரு வேட்பாளர் நேர்காணலுக்கு 25 நிமிடங்கள் முன்னதாக வந்ததே நான் அவரை ஏன் பணியமர்த்தவில்லை என்பதற்கான முக்கிய காரணமாக இருந்தது என்று பிரீவெட்கூறியுள்ளார்.
இந்தப் பதிவு கவனத்தை ஈர்த்ததால், ப்ரீவெட் தனது நிலைப்பாடை தெளிவுபடுத்தினார். பொதுவாக சற்று முன்னதாக வருவது நல்லது என்றாலும், நேரத்திற்கு முன்பே வருவது மோசமான நேர மேலாண்மை அல்லது சமூக விழிப்புணர்வு இல்லாததைக் குறிக்கலாம் என்று கூறினார்.
அவர் கூறுகையில், "சீக்கிரமாக வருவது நல்லது. மிகவும் முன்னதாக வருவது ஒருவருக்கு சரியான நேரத்தில் வேலை இல்லை அல்லது அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கிறார் என்பதைக் குறிக்கலாம்.
வேட்பாளரின் சீக்கிர வருகை தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. வேட்பாளர்கள் ஐந்து முதல் பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் அதற்கு மேல் எதையும் கவனக்குறைவாகக் கருதலாம்" என்றார். இவரின் கருத்துக்கு பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |