3 மாதத்தில் 20 கிலோவுக்கு மேல் எடை குறைத்தது எப்படி? உணவு ரகசியத்தை கூறிய நபர்
வேல்ஸைச் சேர்ந்த நபர் மூன்றே மாதத்தில் எப்படி 20 கிலோவுக்கு மேல் எடை குறைத்தது எப்படி என்று கூறியுள்ளார்.
தற்போது இருக்கும் நவீன உலகில் பலரும் உடல் எடை கூடி அதை குறைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.
அதுவே ஒரு சிலர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உடல் எடை குறைத்துவிடுகின்றனர்.
இது எல்லாம் எப்படி என்பது குறித்த ரகசியத்தை பலரும் கூறமாட்டார்கள்.
அப்படி இருக்க, வேல்சின் Carmarthenshire-ஐ சேர்ந்த நபர் வெறும் மூன்றே மாதத்தில் எப்படி 20 கிலோவுக்கு மேல் எடை குறைத்தேன் என்ற ரகசியத்தை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.
அதில், PE ஆசிரியரான Phil Bowen சுறு சுறுப்பாக வேலையில் இருந்த போதிலும், பல ஆண்டுகளாக அவரது உடல் எடை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
இதனால் இந்த ஆண்டின் துவக்கத்தில் எப்படியாவது இந்த உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
எடை குறைப்பிற்கு முன் 107 கிலோ இருந்த இவர் அடுத்த மூன்று மாதங்களில் அதை 88 கிலோவாக குறைத்தார். உடை எடை குறைப்பிற்காக இவர் அங்கிருக்கும் உள்ளூர் மருந்தகத்தில் இருக்கும் உணவு டையட் பற்றி கேள்விப்பட்டு, அதை முயற்சி செய்துள்ளார்.
இவர் மட்டுமின்றி, தன்னுடன் மனைவியையும் சேர்த்துக் கொண்டார். அந்த உணவு திட்டத்தின் பெயர் DA Group diet. இது ஒரு எளிதில் அனைவரும் பின்பற்றக் கூடிய உணவு திட்டம் ஆகும்.
இதில் நாம் சமைக்கும் சமையல் குறிப்புகள், என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற பட்டியல் மற்றும் எடை உயர்வை குறைப்பதற்கான தயாரிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
கடந்த 2012-ஆம் ஆண்டு DA குழுமத்தால் Swansea பகுதியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இது உள்ளூர் மருந்தகத்தில் எளிதில் கிடைப்பதால், இதை ஏராளமானோர் பயன்படுத்தி, நல்ல ஒரு முடிவை கூறியுள்ளனர்.
Phil Bowen, இந்த DA Group diet-ல் இருப்பவர்கள் என்ன சமைக்கிறார்கள் என்பதை பார்த்த போது அது எனக்கு உண்மையிலே உதவியது.
மேலும், இதை நீங்கள் பின்பற்றும் போது, அந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் எப்போதுமே உங்களுடனே இருப்பார். உண்மையிலே நான் இவ்வளவு எடையை குறைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை, ஆச்சரியப்பட்டேன்.
நான் இதை ஒரு குறுகிய காலத்தில் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய உணவு முறை இப்போது மாறிவிட்டது. நான் முன்பு சாப்பிட்டு வாயிறு நிறைய இருந்தாலும், தொடர்ந்து சாப்பிடுவேன்.
உளவியல் ரீதியாக எனக்கு அதிக உணவு தேவைப்பட்டதே தவிர, உடல் ரீதியாக தேவையில்லை.
முக்கியமாக நான் சர்க்கரையை குறைத்தேன், காபி உட்கொள்வதை குறைத்தேன், அதற்கு பதிலாக தேநீர் எடுத்துக் கொண்டேன். ஆல்கஹால், சோடா நீர் போன்ற நான் அனுபவித்து வந்த அனைத்தையும் மாற்ற கற்றுக் கொண்டேன்.
மேலும், இந்த டயட் மேற்கொள்ளும் போது, அதில் இருக்கும் காப்ஸ்யூல்கள் பசியை குறைக்கவும், கொழுப்பு மற்றும் சர்க்கரையை உறிஞ்சவும் உதவுவதாகவும், இது சரியான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதாகவும் கூறுகிறார்.
தற்போது நான் என்னுடைய உடல் எடையை குறைத்துள்ளது மூலம், நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. என்னுடைய சுயமரியாதை உயர்ந்துள்ளது. நான் இப்போது எல்லாம் ஓடுகிறேன், அதை நன்றாகவே உணர்கிறேன்.
இது உளவியல் ரீதியாக ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது. முதலில் 38 சைஸ் கொண்ட சட்டையை போட்டுக் கொண்டிருந்த நான் இப்போது 34 சைஸ் கொண்ட சட்டையை போட்டு வருகிறேன்.
நான் நிச்சயமாக இதை மற்றவர்களுக்கு 100 சதவிகிதம் பரிந்துரைப்பேன்.
ஒரு சிலர் இவ்வளவு சீக்கரத்தில் எடை குறைத்துள்ளதால், ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா என்று கேட்கின்றனர்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கை முறையே மாறிவிட்டது என்று தான் அவர்களுக்கு கூறுவேன் என முடித்துள்ளார்.