பிற மனைவிகள் சம்மதத்துடன் அடுத்தடுத்த திருமணம்! குடும்பத்தில் 62 பேருடன் குதூகலமாக வாழும் நபர்
5 மனைவிகள், 11 பிள்ளைகள் என 62 பேர் கொண்ட குடும்பத்துடன் வாழும் நபர்.
ஒவ்வொரு திருமணத்தையும் பிற மனைவிகளின் சம்மதத்துடனே செய்துள்ளதாக தகவல்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் சமீபத்தில் ஐந்தாவது திருமணம் செய்த நிலையில் மொத்தமாக 62 பேர் கொண்ட குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டை சேர்ந்த பிரபல யூடியூபரான யாசிர் அந்நாட்டின் தனித்துவமான சுவாரசியமான அம்சங்களை கன்டென்டுகளை தயாரித்து யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில், ஷவுகத் என்ற நபரை பேட்டி எடுத்துள்ளார், அவரிடம் அப்படி என்ன தனித்துவம் உள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்?
ஆம்! ஷவகத் தனித்துவமானவர் தான்..! ஏனெனில் அவருக்கு மொத்தம் 5 மனைவிகள், 11 குழந்தைகள் உள்ளனர். மேலும் மொத்த குடும்பத்தின் எண்ணிக்கை 62 ஆகும், அனைவருடனும் அவர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
YouTube
இவர் ஒவ்வொரு திருமணத்தையும் பிற மனைவிகளின் சம்மதத்துடனே செய்துள்ளார். ஷவுகத்துக்கு முதல் 4 மனைவிகள் மூலம், 10 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் ஐந்தாவது பெண்ணை மணந்திருக்கிறார். இத்தனை திருமணம் செய்வது அவரின் மனைவிகளுக்கு கோபம் இல்லையா என்ற கேள்விக்கு ஷவுகத்தின் மனைவிகள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம் என பதில் அளித்துள்ளனர்