பேருந்தில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டபின்.. கதறி அழும் நபரின் வீடியோ
இந்திய தலைநகர் டெல்லியில் பேருந்து ஒன்றில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு பின் அழுத நபரின் வீடியோ வைரலாகியுள்ளது.
இளம்பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட நபர்
டெல்லியின் ரோகிணி பகுதியில் மாநகர பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணிடம், நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
ஜாகிர் என்ற அந்த நபர் தனது அந்தரங்க உறுப்பை இளம்பெண்ணிடம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்த மார்ஷலிடம் முறையிட்டார். உடனடியாக ஜாகிரை அவர் கையும் களவுமாக பிடித்தார்.
கதறி அழும் வீடியோ
பின்னர் ஜாகிர் அந்த பெண்ணிடம் தன்னை மன்னித்து விடுமாறு கதறி அழும் வீடியோவை பதிவு செய்துள்ளனர். அதில் தனக்கு நேர்ந்த துயரத்தை அப்பெண் விவரிக்கிறார்.
Breaking News: A man named Zakir caught by DTC Bus Marshal, Delhi, while he was flashing his private part to a woman passenger. pic.twitter.com/JTWtamO313
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) January 4, 2023
மேலும் மார்ஷல் காவல்துறையை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பெண்ணிடம் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதற்கிடையில் குறித்த பெண் இதுதொடர்பாக புகார் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.