பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்து
One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரான்சுக்கு தெற்கே அமைந்துள்ள கேன்ஸ் வளைகுடாவில் ஒரு ஆடம்பர படகும், ரப்பர் படகொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நான்கு பேர் கவலைக்கிடம்
அந்த ரப்பர் படகில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்கள் தண்ணீரில் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பதின்மவயதினர் என கூறப்படுகிறது. தகவலறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளார்கள்.
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஒரு 24 வயது இளைஞரைக் காணவில்லை.
மற்றவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன அந்த இளைஞரைத் தேடும் பணி தொடர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |