60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற நபர்: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயம்
A man who went to Nepal to celebrate his 60th birthday has gone missing: நேபாளத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற ஒருவர் மாயமாகியுள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான ஒருவர், தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்றிருந்தார்.
நேபாளப் பெருவெள்ளத்தில் மாயம்
கைலாஷ் மானசரோவருக்குச் செல்வது தீபக் அஹுஜாவுக்கு நீண்ட நாள் கனவு. சமீபத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தீபக், அதைக் காரணமாக வைத்தாவது கைலாஷ் மானசரோவருக்குச் செல்வதென முடிவு செய்தார்.

ஆகவே, தீபக்கும் அவரது மனைவியான மதுவும் நேபாளத்துக்கு புனித யாத்திரை புறப்பட்டார்கள்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் நேபாள எல்லையிலிருக்கும்போதுதான் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெருவெள்ளம் ஏற்படும் முன் தங்கள் பெற்றோரிடம் பேசியதாகத் தெரிவிக்கும் தீபக், மது தம்பதியரின் மகள்களான ஷ்ரேயாவும் அனன்யாவும், பெருவெள்ளம் குறித்த செய்தி கேள்விப்பட்டபின் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
தங்கள் பெற்றோர் சீனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என நம்பும் ஷ்ரேயாவும் அனன்யாவும், தனிப்பட்ட முறையில் தூதரக வாயிலாகவும் அவர்களைத் தேடிவருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
மான்சரோவர் யாத்திரை செல்வது அப்பாவின் கனவு என்று கூறும் பிள்ளைகள், தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தங்கள் அப்பா, அதைக் காரணமாக வைத்தாவது கைலாஷ் மானசரோவருக்குச் செல்வதென முடிவு செய்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
தங்கள் பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என யாருக்காவது தெரியவந்தால் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு அவசரக் கோரிக்கையும் வைத்துள்ளார்கள் ஷ்ரேயாவும் அனன்யாவும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |