89 வயது பாட்டியை சொந்த பேரனே குத்திக் கொன்ற துயரம்: பிரித்தானியாவில் பரபரப்பு!
பிரித்தானியாவின் தெற்கு லண்டனில் தனது 89 வயது பாட்டி சகுந்தலா பிரான்சிஸை குத்திக் கொன்றதாக அவரது பேரன் வெருஷன் மனோகரன்(31) மீது கொலை குற்றம்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளது.
தெற்கு லண்டன், தோர்ன்டன் ஹீத்தில் பகுதியின் பிரிக்ஸ்டோக் சாலையில் உள்ள வீட்டில் சகுந்தலா பிரான்சிஸ்(Sakunthala Francis) என்ற 89 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட பிரித்தானியாவின் மெட் பொலிஸார், சகுந்தலா பிரான்சிஸின் பேரன் வெருஷன் மனோகரன்(31)Verushan Manoharan என்பவர் அவரை குத்திக் கொன்று இருப்பதாக தெரிவித்து புதன்கிழமை மாலை அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் உடலை கைப்பற்றிய பொலிஸார் உடனடியாக சகுந்தலா பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு அதிகாரிகளால் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், கைது செய்யப்பட்ட வெருஷன் மனோகரன் வியாழக்கிழமை குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன், மால்டோவா நாடுகளின் வேட்பாளர் அந்தஸ்து: ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முக்கிய முடிவு!
அத்துடன் சகுந்தலா பிரான்சிஸின் உடல் பிரேத பரிசோதனை பின்னர் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.