உக்ரைன், மால்டோவா நாடுகளின் வேட்பாளர் அந்தஸ்து: ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முக்கிய முடிவு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய இருநாடுகளின் விண்ணப்பத்திற்கும் ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை ரஷ்யா அதிரடியாக முன்னெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணையும் விருப்பதில் இருந்த பின்வாங்குவதாக தெரிவித்த உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையும் தனது விருப்பத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
??⚡️The European Parliament supported the granting of EU candidate status to Ukraine and Moldova and adopted a corresponding resolution. pic.twitter.com/ZD4b0nV9RG
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 23, 2022
இதுத் தொடர்பாக உக்ரைனில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், உக்ரைனின் வேட்பாளர் அந்தஸ்து வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு கடந்த சில நாள்களுக்கு முன்பு பல விதிமுறைகளுடன் ஆதரவு தெரிவித்தது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆயுதம் ஏந்திய காவலர்களால்... விமானத்தில் இருந்து கீழிறக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: பரபரப்பு வீடியோ
இந்தநிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் உக்ரைன் மற்றும் மால்டோவாவிற்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்தை வழங்குவதை ஆதரித்துள்ளது.
மேலும் இதுத் தொடர்பான வாக்கெடுப்பில் 529 உறுப்பினர்கள் ஆதரவும் 45 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்து இருந்த நிலையில், வேட்பாளர் அந்தஸ்து தொடர்பான தீர்மானத்தையும் ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் 14 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.