பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்
கர்நாடகா மாநிலத்தில், பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பட்டாக்கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.
பட்டப்பகலில் நிகழ்ந்த அந்த கொடூரத் தாக்குதலில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்!
பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்
நேற்று மாலை, கர்நாடகா மாநிலத்திலுள்ள Bantwal நகரில் லாவண்யா (21) என்னும் இளம்பெண் பேருந்து நிலையம் ஒன்றிற்குச் சென்று, பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.

அப்போது, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த ஒரு இளைஞர், தன் பையிலிருந்த பட்டாக்கத்தியை உருவியவண்ணம் லாவண்யாவை நோக்கி ஓடியுள்ளார்.
தன்னை நோக்கி கத்தியுடன் ஒருவர் ஓடிவருவதைக் கண்ட லாவண்யா, தப்பியோட முயன்றுள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் லாவண்யாவை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். லாவண்யா கீழே விழ, அந்த இளைஞர் கத்தியை வீசிவிட்டு அங்கு தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
ஒருதலைக் காதல்?
இந்நிலையில், அந்த இளைஞர் பெயர் சேத்தன் என்றும், அவர் லாவண்யாவின் தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது.
அவர் ஒருதலைபட்சமாக லாவண்யாவைக் காதலித்துவந்ததாகவும், அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பட்டப்பகலில் மக்கள்முன்னிலையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தப்பியோடிய சேத்தனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |