ஆன்லைனில் ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த நபர்; பார்சலை திறந்ததும் வீட்டை சுற்றி வளைத்த ராணுவம்!
இப்போது எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்கில் தான் காலமே ஓடுகிறது. மார்கெட்டுக்கோ, ஷாப்பிங் சென்டர்களுக்கோ சென்று பொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல், வீட்டில் உட்கார்ந்து வசதியாக டிவி பார்த்துக் கொண்டே, ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். இதன் மூலம், விரும்பிய பொருட்கள் சில நிமிடங்களில் கூட அவர்களின் வீடுகளுக்கு வந்து சேரும்.
குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்கள் என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் மொபைல் போன்களையே அதிகம் வாங்குகின்றனர். இந்த சூழலில் ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன. சிலர் ஆன்லைனில் விலையுயர்ந்த மொபைல்களை வாங்குவதையும், அவர்கள் பெறும் பார்சல்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் செங்கல் கற்கள் போன்றவற்றையும் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.
மேலும், குறைந்த விலைக்கு பதிலாக விலை உயர்ந்த பொருட்களை டெலிவரி செய்த சம்பவங்களைக் கூட பார்த்திருக்கிறோம். அதேபோன்ற ஒரு சம்பவம் இங்கும் நடந்துள்ளது.
MillenniumNews/Youtube
இங்கு ஒரு நபர் ஆன்லைனில் மொபைல் ஃபோனை ஆர்டர் செய்து, அதற்கு பதிலாக அதிர்ச்சியூட்டும் பொருளை டெலிவரி வாங்கியுள்ளார்.
மொபைல் போனுகு பதிலாக அந்த பார்சலில் வெடிகுண்டு தென்பட்டது. மெக்சிகோவில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் தனது வீட்டிற்கு ஒரு ஆன்லைன் ஸ்டோரில் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தார். ஆனால் பார்சலில் கைக்குண்டு கிடைத்துள்ளது.
Jam Press
அவர் ஆர்டர் செய்த பார்சல் பொட்டலம் திங்கள்கிழமை அந்த நபரின் வீட்டிற்கு வந்தது. அவருடைய அம்மா பார்சலை எடுத்து வீட்டில் உள்ள டைனிங் டேபிளில் வைத்தார். அதில் உண்மையில் வெடிகுண்டு இருந்தது அவருக்குத் தெரியாது.
வீட்டுக்கு வந்தவர் பார்சலை திறந்து பார்த்தபோது அதில் கையெறி வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பயத்தில் நடுங்கினான். உடனே பொலிஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார். அதன்பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதற்கிடையில் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த நபரின் வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்னர், இராணுவத்தினர் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று கைக்குண்டை செயலிழக்கச் செய்தனர். விபத்து தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் அந்த விசித்திர பொட்டலத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
எவ்வாறாயினும், அந்த நபரின் வீட்டிற்கு கைக்குண்டை அனுப்பியது யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அவர் எந்த நிறுவனத்திலிருந்து ஆர்டர் செய்துள்ளார் என்ற விவரத்தையும் தெரிவிக்கவில்லை. பொலிஸார் வழக்கு பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |