மூளைச்சாவு அடைந்த நபர்! உடல் உறுப்பு தானத்துக்கு சில நிமிடம் முன் அசைந்த கால்கள்... ஆச்சரிய சம்பவம்
இறந்தவரின் உடல் உறுப்புகளை தானத்திற்காக எடுக்க நினைத்த போது அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிப்பு.
அமெரிக்காவில் நடந்துள்ள ஆச்சரிய சம்பவம்.
அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நபர் இறுதி நேரத்தில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு கலோரினாவை சேர்ந்தவர் ரயன் மார்லோ. இவர் மனைவி மேகன். மார்லோ பாக்டீரியா தொற்று காரணமாக மூளை வீக்கம் ஏற்பட்டு பதினைந்து நாள்கள் கோமாவில் இருந்திருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில், திடீரென அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்திருக்கிறது.
மருத்துவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். ஏற்கனவே மார்லோ தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருந்த நிலையில் அவரின் உடலின் முக்கிய உறுப்புகளை எடுக்க இருப்பதாக மேகன் பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.
உடல் உறுப்பு தானம் செய்ய சில நிமிடங்கள் இருந்த போது, இறந்த ரியான் மார்லோ-வை காண அவரின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் வந்திருக்கின்றனர்.
Megan Marlow; Grace B
அப்போது அங்கிருந்த உறவினர் ஒருவர் திடுக்கிடும் காட்சியை கண்டார். அதன்படி குழந்தைகளை அருகே பார்த்ததும் மார்லோவின் கால்கள் நடுங்கவோ அல்லது அசைவதையோ அவர் பார்த்திருக்கிறார். இது மேகனுக்கு தெரிவிக்கப்பட உடனடியாக மருத்துவர்களை அவர் அணுகினார்.
பின்னர் சிடி ஸ்கேன் செய்த போது அவரின் மூளை செயல்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து மீண்டும் பேஸ்புக் லைவில் தனது கணவர் மூளைச்சாவு அடையவில்லை என மேகன் தெரிவித்தார்.
தனது கணவரை அனுமதிக்க மற்றொரு மருத்துவமனை ஒப்புக்கொண்டாலும், இது தாமதமானது என்று அவர் கூறுகிறார். மார்லோ உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையில் பலரும் அவர் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
wx11