பிரித்தானிய ரயில் விபத்தில் உயிர்பிழைத்தவர் கோபத்துடன் கேட்ட கேள்வி
லண்டன் அருகே ரயில் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என உயிர் பிழைத்த நபர் தெரிவித்தார்.
99 பேர் காயம்
பிரித்தானியாவில் லண்டன் அருகே பெட்ஃபோர்டு பகுதியில், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 99 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து எந்தவொரு தீ விபத்தின் விளைவும் அல்ல என்பதை தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், விபத்தில் உயிர்பிழைத்த பிரெட் பயாட் என்ற நபர், நேற்று தான் அதிர்ச்சிக்குள்ளானதாகவும், இன்று தனக்குள் மேலோங்கி நிற்கும் உணர்வு 'கோபம்' என்றும் தெரிவித்துள்ளார்.
உயிர்பிழைத்தவர் கேள்வி
அவர், 'பிரித்தானியாவின் ரயில்வே கட்டமைப்பில் சிக்னல் கோளாறுகள் அடிக்கடி நிகழும் நிலையில், இந்த மோதலில் ரயில் ஓட்டுநர் ஒருவர் ஏன் உயிரிழக்க நேர்ந்தது?' என்று கேள்வி எழுப்பினார்.
பிரெட் பயாட், "இன்று நிலைமை ஏதோ ஒரு கனவு போலத் தோன்றுகிறது; இப்போது நான் கோபப்படும் நிலைக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன். எனக்குள் மிகுந்த கோபம் இருக்கிறது.

யார் மீது அல்லது குறிப்பாக யார் மீது கோபப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் விடயம் என்னவென்றால் நம்மிடம் உள்ள ரயில்வே கட்டமைப்பு மிகவும் பழமையானது மற்றும் சிக்னல் கோளாறுகள் அடிக்கடி நிகழ்கின்றன.
இப்போது நான் யோசிப்பது என்னவென்றால்... ஏன் அந்தத் தகவல் என் ரயிலுக்கு சிக்னல் மூலம் தெரிவிக்கப்படவில்லை? இதற்காக அந்த ரயில் ஓட்டுநர் ஏன் தன் உயிரை இழக்க நேர்ந்தது?" என்றார்.
தற்போது விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |