லண்டன் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து: உயிரிழந்தவருக்கு மன்னர் சார்லஸ் இரங்கல்
ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கோர ரயில் விபத்து
லண்டனில் இருந்து 60 மைல் தூரத்தில் அமைந்துள்ள பெட்ஃபோர்டு பகுதியில் இரண்டு ரயிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 89 பேர் வரை காயமடைந்த நிலையில் 11 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கொர்பி-லண்டன் செயின்ட் பான்க்ரஸ் ரயிலும், நாட்டிங்ஹாம்-லண்டன் செயின்ட் பான்க்ரஸ் ரயிலும் வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு எல்ஸ்டோவ் பகுதிக்கு அருகே மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது.

மன்னர் இரங்கல்
இந்நிலையில் லண்டன் அருகே ஏற்பட்ட ரயில் விபத்து அறிந்து மன்னர் 3ம் சார்லஸ் மிகுந்த மனவேதனை அடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பான விவரங்களை அடிக்கடி கேட்டு மன்னர் தெரிந்து வருவதாகவும் அரண்மனை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயர விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களும் உடனடியாக நலம் பெற தனது ஆதரவை மன்னர் வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |