பேச்சுவார்த்தைக்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தெற்கு லெபனான் மீது சனிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 5 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக லெபனானின் தேசிய செய்தி ஊடகமான NNA தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்பட்டுள்ள 5 உயிரிழப்புகளும் நபதியா மாகாணத்தில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

லெபனானின் அரப் சலீம் பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். டெய்ர் அல் சஹ்ரானி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ட்ரோன் மூலம் அல் துவைர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் லெபனான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |