50 லட்ச ரூபாய் வேலையை விட்டுவிட்டு மோமோஸ் பிசினஸ் துவக்கிய நபர்: அவரது இன்றைய வருமானம்
இந்தியாவின் ஹரியானாவில் வாழும் ஒருவர் 50 லட்ச ரூபாய் வேலையை விட்டுவிட்டு மோமோஸ் பிசினஸ் ஒன்றைத் துவக்கியுள்ளார்.

மோமோஸ் பிசினஸ் துவங்கியவரின் இன்றைய வருமானம்
ஹரியானாவில் வாழும் சாகேத் சௌரவ் என்பவர், ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வருமானம் தரும் தனது வேலையை விட்டுவிட்டு, 2023ஆம் ஆண்டு, The Momos Mafia என்னும் மோமோஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளில் தனது நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டியுள்ளதாக தற்போது தெரிவிக்கிறார் அவர்.
இன்று ஏழு இந்திய மாநிலங்களில் தனது நிறுவனத்துக்கு கிளைகள் இருப்பதாக தெரிவிக்கிறார் சாகேத்.
தான் அலுவலகத்தில் வேலை செய்யும்போதே, தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் இணைந்து, Bamboo Cafe என்னும் சிறிய உணவகத்தைத் துவக்கியுள்ளார் சாகேத்.
அங்கு பரோட்டா முதல் பிரியாணி வரை பல உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்துள்ளார்கள் அவர்கள்.
அப்போது அங்கு மோமோஸ் நன்கு விற்பனையாவதை கவனித்த சாகேத்துக்கு மோமோஸ் விற்பனை செய்யும் திட்டம் உருவாகியுள்ளது.
மோமோஸ் விற்பனை துவங்கியதும், வியாபாரம் செய்வது எளிதாக இல்லையாம். ஆரம்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை மேற்கொண்டு, முதல் ஆண்டில் 16 லட்ச ரூபாய் வருவாய், அடுத்த ஆண்டில் 2.2 கோடி ரூபாய், இந்த ஆண்டில் 2.2 கோடி ரூபாய் என இதுவரை 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கிறார் சாகேத்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |