சிறுமிக்கு நடந்த கொடுமை! குற்றவாளிக்கு 9 ஆயுள் தண்டனை... வீடியோ ஆதாரத்தால் சிக்கினான்
அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 9 ஆயுள் தண்டனை விதிப்பு.
அவரால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் சிறை தண்டனை.
அமெரிக்காவில் சிறுமிக்கு நடந்த கொடுமைக்காக 38 வயதான நபர் ஒருவருக்கு 9 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Phillip Lyvonne Stephens (38) என்ற கொடூரனுக்கு இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. 10 வயதான சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது.
அவரின் இந்த செயல் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. Phillip செய்த குற்றத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
Office of the State Attorney
ஏனெனில் இது குறித்து தெரிந்தும் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார். இது எல்லாம் வீடியோ ஆதாரங்கள் மூலமே தெரியவந்துள்ளது. ஏனெனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார்.
இதையடுத்து சிறுமியின் தாய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல குற்றவாளிக்கு 9 ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சிறையில் இருந்து அழைத்து, ஆதாரங்களை அழிக்குமாறு Phillip கேட்டுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.