Bank Account -ற்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு என்ன?
விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.9900 கோடி
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சோதித்து பார்த்துள்ளார். அப்போது தான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது பானு பிரகாஷின் வங்கிக்கணக்கில் ரூ.9900 கோடி இருந்துள்ளது. பின்னர், என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிய விவசாயி சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று விவரத்தை கூறியுள்ளார்.
அப்போது, வங்கி விவரத்தை சோதித்து பார்த்த போதுதான் பிரகாஷ் சொல்வது உண்மை என்று அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பிரகாஷ் வங்கிக்கணக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் (suspend) செய்யப்பட்டது. பின்னர், என்ன காரணத்தினால் இவ்வளவு பணம் போயுள்ளது என்பதை பார்க்கும் போது தொழில் நுட்ப கோளாறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் ரோஹித் கவுதம் பேசுகையில், "பிரகாஷின் வங்கிக்கணக்கிற்கு துரதிஷ்டவசமாக ரூ.9900 கோடி சென்றுள்ளது.
அதனை விரைவில் சரி செய்வோம். அதுவரை அவரது வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |