ஏழ்மையில் வாழ்ந்த நபர்: தான் உண்மையில் கோடீஸ்வர வாரிசு என தெரியவந்தபோது எடுத்த ஆச்சரிய முடிவு
குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்டு, ஆதரவற்ற இல்லம் ஒன்றில் வாழ்ந்துவந்தான் சிறுவன் ஒருவன்.
ஆனால், 26 ஆண்டுகளுக்குப்பின், தான் ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு என அந்த நபருக்குத் தெரியவந்தது.
கடத்தப்பட்ட குழந்தை
சீனாவில், மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்டார் ஷி என்பவர் (Shi Qinshuai).
இப்போது ஷிக்கு 26 வயது ஆகிறது. மகனை இழந்த பெற்றோர், கொஞ்சம் கூட சோர்ந்துபோகாமல் பல ஆண்டுகளாக, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து, மகனைத் தேடிவந்துள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, மகனைக் கண்டுபிடித்துவிட்டார்கள் ஷியின் பெற்றோர்.
தனது அடையாளம் தெரியாமல், ஆதரவற்ற இல்லம் ஒன்றில் எளிமையான நிலையில் வாழ்ந்துவந்த ஷிக்கு, தான் ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு என தெரியவந்துள்ளது.
தான் உண்மையில் கோடீஸ்வர வாரிசு என தெரியவந்தபோது
மகன் கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடிவு செய்த பெற்றோர், விலையுயர்ந்த பொருட்களால் மகனைக் குளிப்பாட்ட முடிவு செய்தார்கள்.
ஆனால், மகனுடைய முடிவு அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆம், தன் மனைவி பிள்ளைகளுடன் வாழ, ஒரே ஒரு குடியிருப்பு மட்டும் போதும் என்று கூறிவிட்டாராம் ஷி.
செல்வச்செழிப்பு, தாங்கள் யார், எந்த நிலையிலிருந்து வந்தோம் என்பதை, தனது குடும்பத்தினரை மறக்கச் செய்துவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார் ஷி.
ஷியின் முடிவு குறித்து வெளியான செய்திகள், இணையவாசிகள் பலரை நெகிழச் செய்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |