வடகொரியாவில் கேபிள் டிவி வாங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
வடகொரியாவில், தொலைக்காட்சியில் கூட மக்கள் தங்கள் இஷ்டத்துக்கு எதையும் பார்க்கமுடியாது என்கிறார், அங்கிருந்து தப்பி வெளிநாடொன்றில் வாழும் சமூக ஆர்வலர் ஒருவர்.
கேபிள் டிவி வாங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
ஆம், வடகொரியாவில் யாராவது தொலைக்காட்சி வாங்கினால், உடனே அரசு அதிகாரிகள் அவர்களுடைய வீட்டுக்கு வருவார்களாம்.
ஒரே ஒரு ஆண்டெனாவை மட்டும் விட்டுவிட்டு, வீட்டிலிருக்கும் ஆண்டெனாக்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவார்களாம்.
அந்த ஆண்டெனா மூலம் அரசு ஒளிபரப்பும் விடயங்களை மட்டுமே காணமுடியும்.
அரசு என்ன ஒளிபரப்பும்?
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னின் குடும்பம் குறித்த ஆவணப்படங்கள், பாடல்கள் என 24 மணி நேரமும் கிம் ஜாங் உன் புகழ் பாடுவதைத்தான் தொலைக்காட்சியில் பார்க்கமுடியும் என்கிறார் சமூக ஆர்வலரான திமோத்தி ச்சோ (Timothy Cho).
அதாவது, கிம் ஜாங் உன்னின் குடும்பத்தைக் குறித்த பிரச்சாரம் மட்டும்தான் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்குமாம், அதைத்தான் மக்கள் பார்க்கவேண்டுமாம்.
ஆக, தொலைக்காட்சியில் கூட மக்கள் தாங்கள் விரும்பும் எதையும் பார்க்கமுடியாது, அந்த அளவுக்கு வடகொரியாவில் கட்டுப்பாடுகள் உள்ளன என்கிறார் திமோத்தி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |