ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை! விரைந்து பிடித்து காப்பாற்றி ஹீரோவான நபர்: வைரலாகும் வீடியோ
சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை, நபர் ஒருவர் லாவகமாக காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சீனாவின் Tongxiang நகரில் கடந்த செவ்வாய்கிழமை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஐந்தாவது மாடியின் சன்னலில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்தது.
அந்த சமயம், தரையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபர் ஒருவர், குழந்தை தவறி விழுவதை பார்த்ததும் அதனை பிடிக்க விரைந்தார்.
செல்போனை வீசிய அவர், தனது கால்கள் சற்று இடறியபோதும் குழந்தையை சரியாக பிடித்து காப்பாற்றினார். அவருடன் பெண்ணொருவரும் குழந்தையை பிடிக்க உதவினார்.
Heroes among us. pic.twitter.com/PumEDocVvC
— Lijian Zhao 赵立坚 (@zlj517) July 22, 2022
இதுதொடர்பான வீடியோவை சீன வெளியுறத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், நம்மில் பல ஹீரோக்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலான இந்த வீடியோ, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த துணிகர செயலில் ஈடுபட்ட நபரின் பெயர் ஷென் டோங் (31) என்பது தெரிய வந்துள்ளது. அவரை பலரும் உண்மையான ஹீரோ என்று கூறி புகழ்ந்து வருகின்றனர்.