குண்டு மழைக்கு மத்தியில் கங்காருவை காப்பாற்றிய தன்னார்வலர்: குவியும் பாராட்டுக்கள்
உக்ரைனில் எரிந்து கொண்டு இருக்கும் வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் இருந்து எட்டு கங்காருகளை தன்னார்வலர் ஒருவர் காப்பாற்றி இருப்பது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் அத்துமீறி ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர ஆயுத தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் ஏவுகணைகள் மற்றும் டாங்கிகளால் தாக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளது.
அந்தவகையில், உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள ஃபெல்மேன் உயிரியல் பூங்காவிற்கு(Felman Ecopark) அருகில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலினால் பூங்காவை சுற்றியுள்ள பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அங்குள்ள விலங்குகளின் உயிர்களை பெரும் ஆபத்திற்குள் தள்ளியுள்ளது.
Are you expecting good news? We have them. Eight kangaroos were evacuated from the Feldman eco-park in Kharkiv region. #StandWithUkraine pic.twitter.com/mwErrzqglH
— Oleksandra Matviichuk (@avalaina) March 26, 2022
இந்தநிலையில், உயிரியல் பூங்காவில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த 8 கங்காருகளை தன்னார்வலர் ஒருவர் காப்பாற்றி தனது வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து சென்று இருப்பது பெரும் பாராட்டை பொதுமக்கள் மத்தியில் பெற்றுவருகிறது.
மேலும் இதுகுறித்த விடியோவை உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் ஒலெக்ஸாண்ட்ரா மட்விச்சுக்(Oleksandra Matviichuk) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு, "நீங்கள் நல்ல செய்தி கேட்பதற்கு விரும்புகிறீர்களா? அந்த நல்ல செய்தியை நாங்கள் வைத்துளோம்" என தெரிவித்து தீ விபத்திற்கு உள்ளாகியுள்ள ஃபெல்மேன் உயிரியல் பூங்காவில் இருந்து பத்திரமாக 8 கங்காருகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கங்காருகள் காப்பாற்றப்பட்டது தொடர்பாக பூங்கா நிர்வாகம் பேஸ்-புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கங்காருகள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அனைத்தும் விரைவில் நல்ல முறையில் திரும்பிவிடும் என நம்பவதாக தெரிவித்து, பூங்கா நிர்வாகம் சார்பில் கங்காருவை காப்பாற்றிய தன்னார்வலர்க்கு நன்றியை பாராட்டையும் தெரிவித்துள்ளது.
மேலும் பூங்காவில் இருந்து விலங்குகளை பாதுகாக்கும் முயற்சி தொடர்ந்து வருவதாகவும், இதற்கு ஓத்துழைப்பு மற்றும் உதவிகள் செய்துவரும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியயோருக்கும் நன்றியை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க தயார்...போரை முதலில் நிறுத்துங்கள்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு