ஒரேயடியாக ரூ 6300 கோடியை கைப்பற்றிய நபர்... சொத்து மதிப்பு ரூ 28000 கோடி: யாரிந்த தொழிலதிபர்
இந்தியாவின் பல தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர். முதலீடுகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்துகிறார்கள்.
GMR குழுமத்தின் நிறுவனர்
தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் பொருட்டு மற்ற நிறுவனங்களிடமிருந்து கடன்களையும் முதலீடுகளையும் பெறுகிறார்கள். அப்படியான ஒருவர் GM Rao என அறியப்படும் கிராந்தி மல்லிகார்ஜுன ராவ்.
உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டாளரான GMR குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, ரூ 28,587 கோடி சொத்து மதிப்பு கொண்ட இந்திய கோடீஸ்வரர் GM Rao.
இவரது GMR Airports Ltd நிறுவனம் இந்தியாவில் டெல்லி, ஐதராபாத் மற்றும் கோவா ஆகிய நகரங்களில் மூன்று விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது. அத்துடன் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் இரண்டு விமான நிலையங்களையும் நிர்வகித்து வருகிறது.
அபுதாபி முதலீட்டு நிர்வாகம்
இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 86,805 கோடிகள் என்றே கூறப்படுகிறது. தற்போது GMR குழுமமானது அபுதாபி முதலீட்டு நிர்வாகத்திடம் இருந்து சுமார் ரூ 6300 கோடி தொகையை முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த தொகையில் GMR குழுமம், கடன்களை மீட்ட உள்ளது என்றே தெரிவித்துள்ளது. மேலும் இந்த பரிவர்த்தனையானது சில நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |