முன்னாள் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீசிய இளைஞர்: 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீசிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பைப் வெடிகுண்டு
கடந்த 2023ஆம் ஆண்டு ஜப்பானின் முன்னாள் பிரதமர் புமியோ கிஷிடா, வாகயாமா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பிரதமர் கிஷிடா உயிர் தப்பினார். ஆனால் அருகில் நின்றிருந்த இருவர் காயமடைந்தனர்.
அதன் பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞர் ரியுஜி கிருமா கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவர் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில், ரியுஜி மீதான வழக்கு வாகயாமா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முதலில் குற்றம்சாட்டப்பட்ட ரியுஜி தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும் அவர் கிஷிடாவை கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார். எனினும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி ரியுஜி கிருமாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உள்ளூர் ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |