அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண்ணை காரில் வைத்து சீரழித்த இளைஞன்! நீதிமன்றம் தந்த தண்டனை
அமெரிக்காவில் அதிகளவு மது அருந்திய பெண்ணை காரில் வைத்து சீரழித்த இளைஞன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லான்காஸ்டர் கவுண்டியை சேர்ந்தவர் ரே எட்வார்ட் ஹோப்மேன் (26). இவர் கடந்த 2019 டிசம்பர் மாதம் மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண் ஒருவரை சந்தித்திருக்கிறார், அப்போது அப்பெண் அளவுக்கு அதிகமாக குடித்த நிலையில் அவரை தன் காருக்கு எட்வார்ட் அழைத்து சென்றார்.
பின்னர் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார் எட்வார்ட்.
இது பதிவு செய்யப்பட்டு பொலிசில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட எட்வார்ட் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 2 முதல் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைக்கு பின்னர் 4 ஆண்டுகள் probationல் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.