பாரிஸ் ரயில் நிலையத்தில் திடீரென தீயிட்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபர்! அடையாளம் தெரிந்தது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தாக்குதல்
பாரிஸின் Gare De Lyon ரயில் நிலையத்தில் Sagou Gouno Kassogue (32) என்ற நபர், திடீரென தனது பையில் தீயிட்டு கொளுத்தி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார்.
அத்துடன் அவர் பயணிகள் மீது கத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.
காலை 8 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து Kassogue பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.
விசாரணை வட்டாரம்
தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை வட்டாரம் கூறுகையில், 'அவர் முதலில் தனது பையை பற்ற வைத்தார். பின்னர் ஒரு Escalator மூலம் சீரற்ற முறையில் மக்களை தாக்குவது போல் தோன்றியது' என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் லேசான காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Kassogue மாலியில் இருந்து 2016ஆம் ஆண்டு இத்தாலிக்கு வந்துள்ளார், அத்துடன் புகலிடக் கோரிக்கையைத் தொடர்ந்ததால் அவருக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் தீவிர மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், இந்த வார இறுதியில் அவர் டுரினில் உள்ள ஒரு மனநல மருத்துவரை சந்திக்க இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |