ஜேர்மனியில் ஓடும் ட்ராமில் பயங்கரம்... கவலைக்கிடமான நிலையில் பெண்ணொருவர்
ஜேர்மனியில், ஓடும் ட்ராமில் ஒருவர் ஒரு பெண் மீது எரிபொருள் ஒன்றை ஊற்றி தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ட்ராமில் பயங்கரம்...
ஜேர்மனியின் Thuringia மாகாணத்திலுள்ள Gera நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஓடும் ட்ராமில் ஒரு பெண் மீது திரவம் ஒன்றை ஊற்றி தீவைத்தார் ஒருவர்.
உடனடியாக மக்கள் ட்ராமை நிறுத்தும் அவசர பொத்தானை அழுத்த, அதைப் பயன்படுத்திக்கொண்டு ட்ராமிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டார் அந்த நபர்.
ட்ராமின் சாரதி விரைவாக அந்தப் பெண் மீது பற்றிய தீயை அணைக்க, ஹெலிகொப்டர் மூலம் அந்த 46 வயதுப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ட்ராமில் பயணித்த வேறு யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள பொலிசார், தப்பியோடிய தாக்குதல்தாரியை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
எதனால் அந்த நபர் அந்தப் பெண் மீது தீவைத்தார், அவர் ஊற்றிய திரவம் என்ன என்பது போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
இதற்கிடையில், தீவைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |