பல் ஆடியதற்காக மருத்துவரை சுட்டுக்கொன்ற நபர்
Man shoots dentist dead over loose tooth: பல் சிகிச்சைக்குப் பின்பும் பல் ஆடியதால், கோபத்தில் பல் மருத்துவரை சுட்டுக் கொன்றுள்ளார் ஒருவர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் எர்னெஸ்டோ (Ernesto Rascón, 30).
எர்னெஸ்டோ, பல் சிகிச்சைக்காக மெக்சிகோவிலிருக்கும் Sonora என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார்.
சிகிச்சைக்குப் பின்பும் பல் ஆடியதால்...
மெக்சிகோவின் Sonora என்னுமிடத்தில் கிளினிக் வைத்துள்ள Dr. அமெத் (Dr Amed de Jesús Preciado Hernández, 42) என்பவரிடம் எர்னெஸ்டோ பல் சிகிச்சைக்காக சென்ற நிலையில், சிகிச்சைக்குப் பின்பும் அவரது பல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறது.
[750D6
ஆகவே, இம்மாதம், அதாவது அக்டோபர் மாதம் 15ஆம் திகதி, மருத்துவரைக் காணச் சென்றுள்ளார் எர்னெஸ்டோ.
ஆனால், அவர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காததால், மருத்துவரைப் பார்க்கமுடியாது என கிளினிக் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே ஆத்திரத்திலிருந்தாலும், அதை வெளியில் காட்டாமல் அமைதியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார் எர்னெஸ்டோ.
ஆனால், உண்மையில் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை, மாறாக, கார் பார்க்கிங்கில் காத்திருந்துள்ளார்.
Dr. அமெத் கிளினிக்கிலிருந்து வெளியே வந்து தனது காரில் ஏற, அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் எர்னெஸ்டோ.
படுகாயமடைந்த Dr. அமெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
எர்னெஸ்டோவை பொலிசார் தேடிவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 17ஆம் திகதி, அவர் எல்லையோரமாக உள்ள கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
பொலிசார் கைது வாரண்டுடன் அங்கு செல்ல, பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார் எர்னெஸ்டோ.
அதைத் தொடர்ந்து பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்த, அந்தக் கட்டிடத்தினுள்ளிருந்து உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார் எர்னெஸ்டோ.