பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில் நபர் ஒருவர், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
Pub-க்கு வெளியே சுட்டுக்கொலை
2005ஆம் ஆண்டு ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதில் ஒரு குற்றவாளியாக இருந்தவர் மார்க் வெப்லி (36).
மேலும், இவர் Euro millions வெற்றியாளரான ஜேன் பார்க்கின் முன்னாள் காதலர் ஆவார். இந்த நிலையில் Edinburgh-யில் புத்தாண்டு தினத்தன்று, Pub ஒன்றுக்கு வெளியே மர்ம நபர்களால் மார்க் வெப்லி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அத்துடன் மற்றொரு நபர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
சகோதரர் இரங்கல்
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மார்க் வெப்லி சுட்டுக் கொல்லப்பட்டது இலக்கு வைக்கப்பட்ட சம்பவமாக தோன்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் தகவல் அறிந்தவர்கள் முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜேன் பார்க் தனது முன்னாள் காதலரின் இறப்பினை ''பேரழிவு'' சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மார்க்கின் சகோதரர் டான் வெப்லி பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, பலர் இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |